DSSSB-ல் தட்டச்சு &சுருக்கெழுத்து படித்தவர்களுக்கு வேலை: 990 பேர் தேவை
tamilnews dsssb/ edited by lawrence / today 12.36 ISTPM website/ lassijoy. blogspot. com
DSSSB-ஆல் நடத்தப்படும் DSSSB Combined Service Examination-க்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . இது குறித்த விபரம் வருமாறு:
EXAM NAME: DSSSB Combined Examination -2024
மொத்த காலியிடங்கள்:
990 (துறை வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டடுள்ளது )என கூறப்பட்டுள்ளன.
கல்விதகுதி ,சம்பளம் ,வயது விபரம் வருமாறு :
1.Senior Personal Assistant:
கல்வி தகுதி:ஏதாவதொரு பாடத்தில் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்க்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்க்கு 110 வார்த்தைகள் என்ற
வேகத்தில் சுருக்கெழுத்து எழுதத்தெரிய வேண்டும்.
சம்பள விகிதம்:ரூ .47,600-1,51,100
வயது வரம்பு :18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
2. Personal Assistant:
கல்விதகுதி:ஏதாவதொரு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்க்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதும் திறன் மற்றும் 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம் :ரூ.44,900 முதல் 1,42,400 வரை
வயது வரம்பு :18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
3. Junior Judicial Assistant :
கல்விதகுதி :ஏதாவதொரு பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்க்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம் :ரூ.29,200 முதல் 92,300 வரை
வயது வரம்பு ;18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு :
மேற்கொண்ட அனைத்து பணிகளுக்கும் கம்ப்யூட்டரில் பணி புரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.SC /ST/OBC பிரிவினர்களுக்கு மத்திய அரசு விதி
முறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
DSSSB -என அழைக்கப்படும் Delhi Subordinate Services Selection Board-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துதேர்வு மற்றும் தட்டச்சு ,சுருக்கெழுத்து
எழுதும் திறன் தேர்வு(Skill Test) ஆகியவற்றை பெறும் மதிபெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வில் பொது அறிவு ,பொது ஆங்கிலம் மற்றும் கணித நுண்ணறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும் . எழுத்து தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் . எழுத்து தேர்வு நடைபெறும் . எழுத்து தேர்வு நடைபெறும் தேதி ,இடம் பற்றிய விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் .
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும் . பெண்கள் ,SC/ST/PWD பிரிவினர்க்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை.
www. dsssbonline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 8.2.2024 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்வையிடவும் .
பதவியின் பெயர் மற்றும் காலிபணியிடங்கள்
| Name of Post | UR | OBC | SC | ST | EWS | Total | PwBD | ESM |
|---|---|---|---|---|---|---|---|---|
| Senior Personal Assitant | 18 | 7 | 7 | 5 | 4 | 41 | 6 | 0 |
| Personal Asssitant | 43 | 153 | 70 | 43 | 58 | 367 | 24 | 0 |
| Personal Assitant | 5 | 2 | 3 | 3 | 3 | 16 | 0 | 0 |
| Junior judicial Assitant | 222 | 138 | 72 | 60 | 60 | 546 | 22 | 54 |
| Junior judicial Assitant | 8 | 0 | 0 | 4 | 4 | 20 | 1** | 2** |
| GRAND TOTAL | 296 | 300 | 152 | 115 | 115 | 990 | 53 | 56 |
%20(1).png)
0 Comments