Educational Managment Information System
"அரசு பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவரின் தனிபட்ட ,தகவல் மதிப்பெண் ,பள்ளி வருகைகள் உள்ளிட்ட EMIS -EDUCATIONAL MANAGEMENT INFORMATION SYSTEM எனப்படும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை மூலம் பராமரிக்கப்படுகிறது . இவற்றில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகளை குருஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகின்றன .
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் இவற்றிக்கிடையே உறவை வலுவாக்க பிரத்யேக WHATSHAP CHANNEL ஒன்றை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி வருகிறது . இதற்கான பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது சோதனைகள் அடிப்படையில் தினமும் 10,000 ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது . இந்த சோதனைகள் முடிக்கப்பட்டு ,அடுத்த மாதம் முதலே பயன்பாட்டுக்கு வரும் என பள்ளிகல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் மாணவர்கள் வருகை | மதிப்பெண் மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் ,சுற்றிற்க்கை விவரங்களையும் பெற்றோர்கள் எளிதாக அறிந்துக் கொள்ள முடியும் . அதே சமயம் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்புடன் கையாண்டால் வரவற்க்கதக்கதே என கல்வியாளர்கள் கூறுகின்றன.
WHATSHAP மூலம் தகவல் தெரிவிப்பது மட்டுமின்றி பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களின் ,Video ,Audio இணைப்புகள் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி ஆலோசனைகள் ,உயர்கல்வித் வாய்ப்புகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்ப முடியும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன . இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் தகவல் பரிமாற்றம் மிக முக்கியமானது என்றாலும் மாணவர்களின் தகவல்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என கல்வியாளர்கள் கூறிகின்றன .
இது போன்ற தகவல்களை பெற :- Click Here

.jpg)
0 Comments