Current Affairs (நடப்புகால நிகழ்வுகள் ) GK Today | by 2024

                                  


 இந்தியாவின் முதல் மூழ்குவிப்பு திரையங்கம் :-

*இந்தியாவின் முதல் 360 டிகிரி கோணத்திலான குவிமாட வடிவிலான மூழ் குவிப்பு திரையரங்கம் ஆனது சென்னையின் கேளம்பாக்கம் சாலையில் திறக்கப்பட்டுள்ளது . 

*அலாவுதீன் ,பீட்டர்பான் ,சேவீங் டிங்கர் பெல் மற்றும் மோபி டிக் போன்ற பல்வேறு திரைப்படங்களை பார்வையாளர்கள்கள் இங்கு கண்டு களிக்கலாம் என்ற வகையில் ,ஒவ்வொரு காட்சிகளும் சுமார் 20-30 நிமிடங்கள் வரை திரையிடப்படும். 

*நாட்டிலேயே முதன் முறையாக ,குவிமட வடிவிலான திரையங்கமானது கதை சொல்லல்  மற்றும் பார்வையாளர்களின் ஈடுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் எதிர்கால முயற்சிகளுக்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. 


                


பச்சை அணகோண்டாவின் புதிய இனங்கள்:

*பூமியில் உள்ள மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாம்பு இனமான பச்சை அணகோண்டாவின் (ஆணைக் கொன்றான்) இதுவரையில் அறியப்படாத ஓர் இனத்தை அறிவியலாளர்கள்  கண்டறிந்தனர் . 

*பச்சை அணகோண்டாவின் ,நீண்ட காலமாக அமேசான் காடுகளில் காணப்படும் மிகவும் வலிமையான மற்றும் மர்மமான விலங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது . 

*பச்சை அனகோண்டாக்கள் உலகின் கனமான பாம்புகள் மற்றும் நீளமானவையாகும் . 

*இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவில் உள்ள ஆறுகள் மற்றும் ஈரநிலங்களில் காணப்படுகின்றன. 

*வரலாற்றில் இதுவரையில் ,பச்சை அனகோண்டாக்கள் (இராட்சத அனகோண்டாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன )உட்பட தற்போது நான்கு அனகோண்டா இனங்கள் அடையாளம் காணப்படுகின்றன . 

*முதன் முறையாக கண்டறியப்பட்ட யூனெக்டெஸ் முரினஸ் என்ற இனமானது பெரு ,பொலிவியா ,பிரெஞ்சு கயானா மற்றும் பிரேசில் ஆகிய பல நாடுகளில் காணப்படுகின்றன. 

*இவை பிரெஞ்சு பச்சை அனகோண்டா என்ற பொதுவான பெயர் கொண்டு அறியப்படுகின்றன . 

*இரண்டாவது ,புதிதாக அடையாளம் காணப்பட்ட இனமானது யூனெக்டெஸ் அகாயிமா அல்லது வடக்கு பச்சை அனகோண்டா என்று அறியப்படுகின்றது . 

*இது ஈக்வெடார் ,கொலம்பியா ,வெனிசுலா ,கயானா ,சூரினாம் மற்றும் பிரெஞ்சு கயானா ,ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. 


                   


விண்வெளித்துறையில் அந்நிய முதலீடு  :

*விண்வெளித்துறையில் சில நடவடிக்கைகளுக்கு 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

*விண்வெளித்துறையில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடு என்பது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது . 

*முதல் வகையானது ,செயற்கைக்கோள் உற்பத்தி மற்றும் செயல்பாடு ,செயற்கைக்கோள் தரவுத் தயாரிப்புகள் மற்றும் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பயனர் பிரிவில் தன்னியக்கம் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்பட்டதா ) என்ற வழிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்படும். 

*இரண்டாவது பிரிவில் ,ஏவு கலங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் அல்லது துணை அமைப்புகள் ,விண்கலங்களை ஏவுவதற்கும் ,திரும்ப பெறுவதற்கும் பயன்படும் விண்வெளித் தளங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தானியங்கி என்ற வழிமுறையின் மூலம் 49 சதவீதத்திற்கு மிகாமல் FDI மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படும் . 

*இந்த வகையில் 49 சதவீதத்திற்கு மேற்பட்ட அந்நிய நேரடி முதலீட்டிற்கு அரசுசார் (இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவைப்படும் ) என்ற வழிமுறையின் கீழ் அனுமதி வழங்கப்படும் . 

*மூன்றாவது பிரிவில் ,100% வரை அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தள்ளது . 

*இது செயற்கைக்கோள்கள் ,தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பயனர் - பிரிவுக்கான கூறுகள் மற்றும் அமைப்புகள் அல்லது துணை அமைப்புகளின் தயாரிப்பிற்கான அந்நிய நேரடி முதலீடுகளுக்குத் தானியங்கி என்ற வழிமுறையின் கீழ் அனுமதி வழங்கப்படும்.  

Post a Comment

1 Comments