மதுரை எய்ம்ஸ் முதல்வர் மு.க ஸ்டாலின் -விவாதம்.

 மதுரை எய்ம்ஸ் முதல்வர் மு.க ஸ்டாலின் -விவாதம்.

             


சென்னை

தமிழகத்தில் மதுரை எய்ம்ஸின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி, இன்னும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதைத்தான் முதல்வர் கிண்டலாக தனது உரையில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தனது உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து தனது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கூறி தமிழக அரசு எழுதி கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் புறக்கணித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில் பெரியார், அண்ணா, கருணாநிதிதான் எங்களை எந்த நாளும் வழி நடத்திக் கொண்டிருக்கும் சக்திகள். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்று பெருமை அடைய மேற்கண்ட மூவர் வகுத்துக் கொடுத்த வழித்தடமே காரணம். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. தடுக்கவும் முடியாது. ஒரு காலத்தில் வடக்கும் வாழ்கிறது தெற்கு தேய்கிறது என நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்கும்.


திராவிட மாடல்.


திராவிட இயக்கத்தினால்தான் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல. கொள்கையை செயல்படுத்தும் களம் என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் அண்ணாவும் கருணாநிதியும். 'இன்னாருக்கு மட்டுமே இன்னது' என்பதை மாற்றி 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் பெரியார். அதில் ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன கால சிந்தனையுடன் இணைத்து திராவிட மாடல் ஆட்சியை உங்களின் பேராதரவுடன் 'நான்' நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டசபையில் ஆளுநர் ரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில் பெரியார், அண்ணா, கருணாநிதிதான் எங்களை எந்த நாளும் வழி நடத்திக் கொண்டிருக்கும் சக்திகள். இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் தமிழகம் என்று பெருமை அடைய மேற்கண்ட மூவர் வகுத்துக் கொடுத்த வழித்தடமே காரணம். திராவிட மாடல் கொள்கைகளில் பயணிப்பதால்தான் தமிழக வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. தடுக்கவும் முடியாது. ஒரு காலத்தில் வடக்கும் வாழ்கிறது தெற்கு தேய்கிறது என நாமே முழங்கினோம். இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்கும் திராவிட இயக்கத்தினால் தான் இவை அனைத்தும் சாத்தியமாகி இருக்கிறது. ஆட்சி என்பது வெறும் அதிகாரம் அல்ல. கொள்கையை செயல்படுத்தும் களம் என்று மாற்றிக் காட்டியவர்கள்தான் அண்ணாவும் கருணாநிதியும். 'இன்னாருக்கு மட்டுமே இன்னது' என்பதை மாற்றி 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற கருத்தியலை அரசியல் களத்தில் விதைத்தார் பெரியார். அதில் ஆட்சி நிர்வாகத்தில் செயல்படுத்தியவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அதே கோட்பாட்டை இன்றைய நவீன கால சிந்தனையுடன் இணைத்து திராவிட மாடல் ஆட்சியை உங்களின் பேராதரவுடன் 'நான்' நடத்தி வருகிறேன்.

'நான்' என்றால் தனிப்பட்ட நான் அல்ல. அப்படி எப்போதும் நான் கருதியது கிடையாது. 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று பொறுப்பேற்கும்போது அந்தச் சொல்லை உச்சரித்தது நான்தான். உச்சரிக்க வைத்தவர்கள் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள். அந்த தமிழ்நாட்டு மக்களுக்காகவே ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன்


ஆளுநருக்கு கண்டனம்: ஆளுநர் உரையுடன் இந்த ஆண்டுக்கான பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவதுதான் மரபு. அரசின் கொள்கையை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்து கொடுப்பதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரே என கருதும் வகையில் நடந்து கொண்டார். கோடிக்கணக்கான மக்களை அலட்சியப்படுத்தும் செயல் அல்லவா இது? இது போல் எத்தனை தடை வந்தாலும் உடைத்து எழுந்து வருவோம்.


எய்ம்ஸ் மருத்துவமனை: மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் மத்திய அரசின் தவறான கொள்கைளை நான் அதிகம் விவரிக்க தேவையில்லை, விருப்பமும் இல்லை. நாம் இரண்டு இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக் கூட மத்திய அரசு நிவாரணத் தொகை தரவில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கூட நிறுத்திவிட்டார்கள். இதனால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments