கலைச்சொற்கள் மற்றும் &இலக்கணகுறிப்பு

                           பொருள் அறிவோம். 




முன் பொருள் பின் பொருள்
பகலவன் கதிரவன்
கதம் சினம்,ஓட்டம்
கணீர் என்று உரக்க
கொழுத்த பருத்த
கோமுனி முதன்மை முனிவன்
ஞானகூத்தன் சிவன்
சௌரியன் வீரன்
தீக்கலம் தீச்சட்டி
நின்மலம் மாசின்மை
பழித்துரை பழிச்சொல்
பற்றம் கற்றை,கூட்டம்
பாடாவதி மட்டமானது
பின்னும் மேலும்
பெருமானார் முகமது நபி
மொய்ப்பி இல்லை என்று நிறுவு
மறத்துறை பாவநெறி
மாளிகை அரண்மனை
மாருதம் காற்று
முந்நீர் கடல்
முதுகாடு பழங்காடு,சுடுகாடு
முதுமொழி பழமொழி
முன்மாதிரி எடுத்துக்காட்டு
மேம்பாக்கு மேலோட்டம்
வம்சம் பரம்பரை




                                    

கலைச் சொற்கள்
Blast Furnace ஊதுஉலை
Anionic Complex எதிரயனி அணைவு
Wave Diagram அலை வரைபடம்
Hiatus Hernia குடல் இறக்கம்
Collision Theory மோதல்,கொள்கை
Power Stroke விசைத் தாக்கம்
Intercostal Muscles விலா எலும்பிடைத் தசைகள்
Gangue கனிமக் கழிவு
Configuration நிலை அமைப்பு
Possive Transport இயல்பு கடத்தல்




தனிமம் நொபிலியம்
குறியீடு No
அணு எண் 102
அணு எடை 259

டாக்டர் சன்யாட் சென் 

ஒரு வறுமையான குடும்பத்தில் காண்டன் நகரத்தின் அருகே பிறந்த டாக்டர் சன்யாட் சென் ,நவீன சீனாவின் தந்தை . ஒரு கிறித்துவப் பள்ளியில் கல்வி பெற்றதோடு கிறிஸ்த்துவராகவும் மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவப் பயிற்சி பெற்றார். அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த அவர் 1895- இல் மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அவர் 1905 ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒரு அரசியல் கட்சியைத் துவக்கினார். அதுவே 1912-ல் கோமிங்டாங் என்றும்,தேசிய மக்கள் கட்சி என்றும் உருவெடுத்தது.




   


இலக்கண குறிப்பு
மூடுபனி வினைத்தொகை
வில்வாள் உவமைத்தொகை
ஆடுங்கிளை பெயரெச்சத்தொடர்
மாக்கடல் உரிச்சொல் தொடர்
வெம்பி வினையெச்சம்





பகுபத உறுப்பிலக்கணம்
கண்டான் காண்(காண்) +ட்+ஆன்
காண் பகுதி(கண் எனக் குறுகியது விகாரம் )
ட் இறந்தகாலம் இடைநிலை
ஆன் ஆண்பால் வினைமுற்று விகுதி 

மற்ற அனைத்து விவரங்களை அறிய -click here


Post a Comment

0 Comments