Home :- திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம் – ஜுலை 17 முதல் 31 வரை
DINDIGUL மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற 17.07.2026 தேதி முதல் 31.07.2026 வரை நடைபெற உள்ளது ,எனவே சுயகணக்கெடுப்பு Self-survey விவரங்களை இணையவழி மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் (District Collector) தலைவர் திருமதி துர்கா மூர்த்தி இ. ஆ. ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
இரண்டு வகையாக கணக்கெடுப்பு Survey முறை நடைபெறும் :-
2026-2027 ஆம் ஆண்டிற்கான இந்திய நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க கூடிய இந்த மக்கள் தொகை Population கணக்கெடுப்பு இருக்கும் .நம் நாட்டின் முறையான திட்டமிடல் ,கல்வி சுகாதார மேம்பாடு Education and Health Development மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றைக்கான வசதிகளை உருவாக்க கணக்கெடுப்பு முறை மிகவும் துல்லியமாக நடைபெறும். இவ்வகை கணக்கெடுப்பானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.1). சுயகணக்கெடுப்பு 2). வீட்டுப்பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பு ஆகும்.
*1. Self -Enumeration
*2. House listing and House census
சுயகணக்கெடுப்பு :-
சுயகணக்கெடுப்பு விவரங்களை பூர்த்தி செய்ய விரும்புவோர் https://se.census. gov.in/ என்ற இணையதள வாயிலாக முழு விவரங்களை பூர்த்தி செய்து பயன்பெறலாம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 33 வகையான கேள்விகள் இடம்பெறும் எனவே பொதுமக்கள் General public 17.07.2026 முதல் 31.07.2026 ஆகிய தேதிக்குள் அவர்களாகவே முன் வந்து சுயகணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்யலாம் என Dindigul District Chief Officer & District Collector Mrs.Durgamurthy IAS அவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்.
வீட்டுப்பட்டியல் & வீடுகள் கணக்கெடுப்பு :-
அலுவலர்கள் & ஊழியர்கள் இந்த வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு மையமானது 01.08.2026 முதல் 30.08.2026 வரை 1MONTH காலத்திற்கு வரை இப்பணியானது நடைபெறும்.1 மாத காலத்திற்குள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பில் பதிவு செய்து முடித்தவர்கள் யாரேனும் இருந்தால் ,வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பின் போது வருவோரின் அலுவலர் ,மற்றும் ஊழியர்களிடம் உங்களின் விண்ணப்பங்களை காண்பித்து அதனை முழுமையடைச் செய்யலாம்.
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் 33 கேள்விகள் இடம் பெறும் அவைகள்:-
| 1. | கட்டிட எண் |
|---|---|
| 2. | சென்சஸ் வீட்டு எண் |
| 3. | சென்சஸ் வீட்டு தரையின் பிரதான கட்டுமான பொருள் |
| 4. | சென்சஸ் வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள் |
| 5. | சென்சஸ் வீட்டுக் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள் |
| 6. | சென்சஸ் வீட்டின் நிலைமை |
| 7. | குடும்ப எண் |
| 8. | குடும்பத்தில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை |
| 9. | குடும்பத் தலைவரின் பெயர் |
| 10. | குடும்பத் தலைவரின் பாலினம் |
| 11. | குடும்பத் தலைவர் வகுப்பு |
| 12. | மற்ற பிரிவை சார்ந்தவரா |
| 13. | சென்சஸ் வீட்டின் உரிமை நிலை |
| 14. | வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை |
| 15. | குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை |
| 16. | குடிநீருக்கான பிரதான ஆதாரம் |
| 17. | குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம் |
| 18. | விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம் |
| 19. | கழிப்பிட vasathi |
| 20. | கழிப்பிட வசதியின் வகை |
| 21. | கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு |
| 22. | குளிக்கும் வசதி |
| 23. | சமையலறை வசதி மற்றும் LPG / PNG இணைப்பு |
| 24. | சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள் |
| 25. | வானொலி / டிரான்சிஸ்டர் |
| 26. | தொலைக்காட்சி |
| 27. | இணையதள வசதி |
| 28. | மடிக்கணினி / கணினி |
| 29. | தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட் போன் |
| 30. | மிதிவண்டி / ஸ்கூட்டர் / மோட்டர் சைக்கிள் / மொபட் |
| 31. | கார் / ஜீப் / வேன் |
| 32. | குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான தானிய வகை |
| 33. | கைபேசி எண் |

0 Comments