Home : EXAM
NIFT (National Institute of Fashion Technology) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனங்களில் (NIFT) இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு NIFT தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
முக்கிய குறிப்பு :-
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான NIFT நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் DECEMBER 8 ஆம் தேதி தொடங்கி தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலக்கெடு முடிவடையும் நாள் :-
விண்ணப்பதாரர்கள் January 13ஆம் தேதி வரை பதிவு செய்யுமாறு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, காலக்கெடு இப்போது ஜனவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மற்றும் திருத்தத் தேதிகள் :-
தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் NIFT (இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகள்) திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்களை https://exams.nta.nic.in/niftee/ என்ற இணையதளத்தில் பூர்த்தி செய்யலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு ஜனவரி 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு : இந்த அறிவிப்பை நீங்கள் https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.
NIFT-க்கான இணையதளப் பக்கத்தை அறிய. :- Click Here
விண்ணப்பப் பக்கம் : Click Here
All News Job Notification Link : Click Here
.png)
0 Comments