Home : Election Commission Of India
SIR 2026 - முக்கிய குறிப்புகள் :-
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கணக்கீட்டு படிவத்தை இணையதளம் வாயிலாக நிரப்பும் வசதியை கொண்டு வந்துள்ளது. அர்ச்சனா பட்நாயக் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் அறிவிப்பு.
2026 ஆம் ஆண்டு தேர்தல் வருவதையொட்டி வாக்களார்கள் Voter Id வசதிக்காக ஆன்லைன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டு படிவத்தை நிரப்ப உள்ளன. அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci. gov. in க்கு சென்றுஅதில் (Enumeration Form ) -யை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
Fill Enumeration Form :-
பதிவு செய்யப்பட உள்ள வாக்களார்கள் உங்களின் கைபேசி எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி online மூலம் உள்நுழைந்து பதிவு செய்யப்பட்ட Mobile Number எண்ணிற்க்கு வரும் OTP எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.உள்நுழைந்த பின்னர் இணையதள பக்கத்தில் திரையிடப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வசதியானது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும் ஆதார் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தக்கூடிய வாக்களார்களுக்கு மட்டுமே ஆன்லைன்னில் பதிவு செய்யப்பட தகுதியானர்வர்கள்.
வாக்காளர்கள் விவரம் & e-sign முறை :-
பதிவு செய்வதற்கான பக்கத்திற்கு சென்ற பிறகு அதில் கொடுக்கப்படும் படிவத்தில் வாக்காளர்களின் முழு விவரத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட பிறகு e-sign பக்கத்திற்கு செல்லும். பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்க்கு கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த கடவுச்சொல்லை உள்ளீடு செய்த பிறகு விண்ணப்ப படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
How to apply : -
1. https://voters.eci. gov. in என்ற இணையதள பக்கம் செல்லவும்.
2. அதே பக்கத்தில் "Fill Enumeration Form" என்ற லிங்க்-யை Click செய்யவும்.
3. Mobile No , Captcha வை உள்ளீடு செய்யவும்.
4. உங்களின் மாவட்டம் ,மாநிலம் ,ஊர் ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
5. Prefilled Information திரையில் தோன்றும்.
6. பிறகு அதன் கீழே SIR என்ற படிவத்தினை பூர்த்தி செய்து Continue கொடுக்கவும்.
7. உங்கள் பதிவு பதிவேற்றப்படும்.
Official Website Election Commission : Link
Application link for registration : Click Here
.jpg)
0 Comments