கால்பந்து வீரர்கள் முகாம் ஜூன் 29,30 | இடம் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் |Sports News

Home : Sports News 



திண்டுக்கல்லில்  உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகின்ற ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் அகில  இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இணைந்து நடத்தும் இந்த மாநில அளவிலான கால்பந்து முகாமை திண்டுக்கல்லில் நடத்த உள்ளனர் . இதில் தகுதியுள்ள ஆண் ,பெண் இருபாலரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். 
    
Quick Summary : 

1.நிறுவனத்தின் பெயர் கால்பந்து ஆகாடமிகள் (Football Academies)
2.முகாம் நடக்கும் நாள் ஜூன் 29,30,2025
3.முகாம் நடக்கும் நேரம் ஆண்களுக்கு ஜூன் 29-காலை 7 மணி , பெண்களுக்கு ஜூன் 30 -காலை 7 மணி
4.தேர்வு செய்யப்படுவோர் Coming Soon
5. வயது வரம்பு 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.
6. பதிவு முறை Online
7. Official Website https://forms.gle/bmpgPZuSchYcrqtv6


இளம் வீரர்களை உருவாக்குதல் : 

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ,சார்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இந்த இரு அமைப்புகளும் சேர்ந்து பல கால்பந்து அகாடமிகளை உருவாக்கி வருகின்றன இதன் மூலம் இந்தியாவில் இளம் கால்பந்து வீரர்களின் திறனை வளர்க்கும் நோக்கமாகும்.  

இதன் ஒரு பகுதியாக வீரர்கள் தேர்வு நடக்க உள்ளது. ஆண்கள் பெண்களுக்கான தேர்வு முகாம்கள் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் ஜூன் 29,30 ல் நடைபெற உள்ளன. இந்த முகாமில் தேர்வானவர்கள் அகாடமி பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார். 

விண்ணப்பம் பதிவு முறை :

 மாநில அளவிலான கால்பந்து முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் https://forms.gle/bmpgPZuSchYcrqtv6 என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

Online Registration Link : Click Here  

Post a Comment

0 Comments