Advantages and Disadvantages of Using Mobile Phone Before Sleeping

         


மொபைல் போனால் வரும் நன்மைகள் மற்றும் தீமைகள் :-

எந்த ஒரு நோயும் முன்கூட்டியே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள முடியும். நீரிழிவு 25 வயதிலுள்ளவர்களை கூட தாக்குகிறது. 30 வயதினை கடந்தவர்கள் ரத்தப் பரிசோதனை செய்தால் அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு ஏற்படுமா அல்லது பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு வரும் காலத்தில் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறிந்தால் அதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வதை அன்றே துவங்க வேண்டும்.

வரும் முன் காப்போம்… எல்லோரும் பின்பற்ற வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் யாருக்கு என்ன நோய் எப்போது ஏற்படும் என்று கணிக்கவே முடிவதில்லை. அதன் அடிப்படையில் அந்தந்த வயதில் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டால், நோயின் தாக்கத்தினை ஆரம்பநிலையில் கண்டறிந்து அதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்’’ என்கிறார் நியுபர்க் ஆய்வு மையத்தில் கன்சல்டன்ட் மருத்துவரான டாக்டர் அகிலா. இவர் நம் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.

‘ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய பிரச்னை இல்லாமல், பெரும்பாலான இளைஞர்கள் சந்திப்பது, ஃபேட்டி லிவர் பிரச்னை. கணையம் இன்சுலினை சுரக்கும். அது நம் உடலில் உள்ள குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்கும். இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றால், அதற்கு முதல் முக்கிய காரணம் உடல் பருமன். இந்த ஃபேட்டி லிவர் பிரச்னை இளைத்தவர்களையும் பாதிக்கிறது. அதற்கு பாடி காம்போசிஷன் அனாலிசஸ் செய்ய வேண்டும்.

இதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். திரெட் மில் செய்தால், இதய பிரச்னையினை கண்டறியலாம். இ.சி.ஜியில் கண்டறியாத சின்ன மாற்றங்களும் திரெட்மில்லில் தெரியும்’’ என்றவர் தற்போது பெரும்பாலானவர்கள் ஃபேட்டி லிவர் பிரச்னையால்
அவதிப்படுவதாக கூறினார்.

சூரியன் மூலம் வரும் நன்மைகள்:-

சிலர் ஒரு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்வார்கள். அதற்கு பதில் 20 நிமிடம் பிரிஸ்க் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பிறகு 10 நிமிடம் யோகாசனம். அதில் சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் காலை இளம் வெயில் நேரத்தில் செய்தால், சூரியக் கதிரில் இருந்து வெளியாகும் விட்டமின் டி எலும்பினை வலுவாக்கும். குறிப்பாக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். இன்றைய சூழலில் பெண்கள் தங்களுக்காக சில மணி நேரம் ஒதுக்க தவறுகிறார்கள்.

மண்ணீரலை சுற்றி கொழுப்பு தங்க காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையற்ற சாப்பாடு. இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டு முடித்திட வேண்டும். சரியான நேரத்தில் முறையாக சாப்பிட்டால்தான் சாப்பிட்ட உணவுகள் சரிவிகித குளுக்கோஸாக மாற்றக்கூடிய வேலையினை உடல் மேற்கொள்ளும்’’ என்றவர் சாப்பிடும் முறைகளை சரியாக கடைபிடித்தாலும், உடற்பயிற்சி மற்றும் தூக்கமும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் போன் டென்சிட்டி ஆய்வு செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை உள்ளதா என்று கண்டறியலாம். இந்த ஆய்வுகள் மூலம் முன்கூட்டியே பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே இதற்கான தீர்வினை காண முடியும். ஆனால் இவை செய்து கொள்ள பெண்கள் முன்வருவதில்லை. அதை உடைத்து அவர்களுக்கு இவை எல்லாம் அவசியம் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளை கையாளும் வகை:-

அதாவது, குழந்தைக்கு டவுன்சிண்ட்ரோம், குரோமோசோம்களின் அளவு, ஸ்கேன் செய்து இதய பாதிப்பு என அனைத்தும் ஒரு ரத்த ஆய்வில் பிறக்கப் போகும் குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா என்று எளிதாக கண்டறியலாம். இது தவிர்த்து குழந்தை பிறந்த பிறகு உடனே சில குழந்தைகளின் செயல்பாட்டில் மாற்றம் தென்படும். அவர்கள் அழமாட்டார்கள். அதற்கு கால் பாதங்களில் ரத்தத் துளிகளை சேகரித்து, காயவைத்து, அதனை ஆய்வு செய்தால், அவங்களுக்கு தைராய்டு, என்சைம் மற்றும் லாக்டோஸ் குறைபாடு உள்ளதா என்று ஆரம்ப நிலையில் அறிந்து அதற்கான சிகிச்சையினை அளிக்கலாம்.

ஹார்மோன்ஸ் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பாக பெண்களுக்கு செய்வது அவசியம். ஒவ்வொரு உறுப்புகளிலும் புற்றுநோய் உள்ளதா என்றும் கணிக்கலாம். புற்றுநோய் எந்த உறுப்பினை தாக்கியுள்ளது என்பதையும் கண்டறிய முடியும். அதன் பிறகு அந்தப் பகுதியினை ஸ்கேன் செய்து சிகிச்சை அளிக்கலாம். அடுத்து மெட்டர்னல் மார்க்கர். கரு உண்டான பத்து வாரத்தில் கருவின் வளர்ச்சியை கண்டறியலாம்.

மேலும் தகவல் தொடர்புக்கு :- Click Here


Post a Comment

0 Comments