தட்டா அச்சுபொறிகள்
விளக்கம் :
''தட்டா அச்சுப்பொறிகள் அச்சிடுவதற்கு தட்டும் பாகங்களைப் பயன்படுத்துவதில்லை. இது லேசர் மற்றும் நிலை மின்னோட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த அச்சுப்பொறிகள் தட்டல் அச்சுப்பொறிகளை விட வேகம் மற்றும் தரத்தில் சிறந்தது. லேசர் (Laser) அச்சுப்பொறி மற்றும் மைப்பீச்சு(Inkjet)அச்சுப்பொறி ஆகியவை தட்டா அச்சுப்பொறிக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
லேசர் அச்சுப்பொறி (Laser Printer):
''மைப்பீச்சு அச்சுப்பொறிகள் கருஞ்சிவப்பு,மஞ்சள் மற்றும் சியான் உள்ளடக்கிய மைக்குப்பியைப் பயன்படுத்தி வண்ன சாயலை உருவாக்குகிறது. ஒரு நிற வண்ணத்தில் அச்சிடுவதற்கு கறுப்பு மைகுப்பியை பயன்படுத்துகிறது. மைப்பீச்சு அச்சுப்பொறிகள் ஒரு காகித தாளில் மின்னோட்டம் பெற்ற மையைத் தெளிப்பதன் மூலம் செயல்படுகிறது. மைப்பீச்சு அச்சுப்பொறிகள் வெப்பம் மூலம் மின்கலன் சூடாவதால் மை காகிதத்தில் குமிழகளாக தெளிக்கப்படும் தொழில்நுட்பத்தை அல்லது தகைவு மின்சாரத்தை பயன்படுத்தி மின்சுற்றுக்கள் மூலம் கட்டுப்படுத்தப்படும் சிறிய மின்னோட்டங்கள் ஜெட் வேகத்தில் அச்சுப்பொறிகள் உள்ளே மையப் பரப்புகின்றன.
.jpg)
.png)
0 Comments