Home :- Driving License
தனிப்பட்ட ஒரு நபர் ஓட்டுநர் உரிமம் driving license பெற வேண்டுமென்றால் முதலில் அந்த நபர் 18 வயதினை பூர்த்தியடைந்திருக்க வேண்டும் . அடுத்தப்படியாக அந்த நபர் இரு சக்கர வாகனமா அல்லது LMV மோட்டார் வாகனமா அதாவது (bike ,car , jeep) என முதலில் உறுதி செய்ய online மூலம் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்வதை அடுத்து ,அவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகாரம் செய்யப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் Motor Vehicle Inspector முன் வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி சோதனைக்கு ஆஜராக வேண்டும். மேலும் இதனை வைத்து LLR -யினை பதிவு செய்ய https://sarathi. parivahan.gov. in/ என்ற இணையதள மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் எத்தனை வருடங்கள் தகுதியுடையதாகும் ?
இன்று ஒரு நபருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கபட்டால் சுமார் 20 வருடத்திற்கு சட்டப்படி செல்லுபடியாகும் ,அதாவது ஒரு நபருக்கு ஓட்டுநர் உரிமம் 25 வயதில் வழங்கப்பட்டால் அவர் அந்த ஓட்டுநர் உரிமத்தை 50 வயது வரை அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Bus,Lorry,Taxi போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் 5 வருடங்களுக்கு மட்டுமே தகுதியுடையதாகும்.
ஓட்டுநர் உரிமம் எப்படி வழங்கப்படும் ?
1. ஓட்டுநர் உரிமம் கோரி வந்த அந்த நபரை முதலில் மோட்டார் வாகன ஆய்வாளர் அவரின் ஓட்டும் திறனை கண்காணிப்பார்.
2. பிறகு அந்த வாகனம் ஓட்டும் காட்சியை உதவி ஓட்டுநர் அதிகாரி Driving Officer புகைப்படம் மற்றும் பயோ மெட்ரிக் எடுத்த பின்பு அவருக்கு ஓட்டுநர் உரிமம் உறுதி செய்யப்படும்.
3. ஓட்டுநர் உரிமம் கோரி வந்த ஒரு நபருக்கு குறைந்தபட்சம் மூன்று முறை தேர்வு அளிக்கப்படும்.
4. ஒரு முறை ஓட்டுநர் உரிமம் தேர்வில் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் 7 நாட்களுக்கு பின்பு தான் மறுபடியும் அவருக்கு தேர்வு நடைபெறும்.
5. மூன்று தேர்வில் அந்த நபர் தோல்வியடைந்தால் அவர் மீண்டும் தேர்வில் கலந்துக்கொள்ள 60 நாட்கள் ஆகும்.
ஓட்டுநர் உரிமம் பயிற்சியின் போது தேவைப்படும் ஆவணங்கள் :-
1. தகுதிச் பதிவுச்சான்றிதழ்
2.பழகுநர் ஓட்டுநர் உரிமம் சான்று
3. ஆன்லைன் பதிவு செய்த விண்ணப்ப படிவம்
ஓட்டுநர் உரிமம் பயிற்சிக்கான கட்டணம் :-
1. ஒரு வாகன (வகை) கட்டணம் : ரூ.800/-
2. இரண்டு வாகன (வகை) கட்டணம் : ரூ. 1100/-
ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைன் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
மேலும் இது போன்ற விவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்



No comments:
Post a Comment