Home :- மானியக்கடன் (SUBSIDIZED) வழங்கும் முகாம் 2026 -திண்டுக்கல் மாவட்டம் நடைபெறும் நாள் 16.07.2026
திண்டுக்கல் மாவட்டத்தில் 16.07.2026 அன்று மகளிர் (Women)-க்கான மானியக்கடன் (Subsidized Loan) வழங்கும் முகாம் மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் Mrs. Durga Moorthy இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
சிறப்பு நேர்காணல் :-
செ. வெ. எண் : 20/2026 -ன் படி Dindigul மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அவரின் முன்னிலையில் சிறப்பு நேர்காணல் அடிப்படையில் மானியக்கடன் வழங்கும் subsidized loan camp dindigul 2026 முகாம் நடைபெறும். இதில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணத்துடன் வருகின்ற 16.07.2026 வியாழக்கிழமையன்று குறு ,சிறு & நடுத்தரத் தொழில் நிறுவனம் துறை மாவட்ட தொழில் Subsidy மையம் சிட்கோ தொழிற்பேட்டை திண்டுக்கல் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
எந்தெந்த நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும் :-
| Sl . No | மானியம் பெரும் நிறுவனங்கள் | மானியம் பெறும் தொகை |
|---|---|---|
| 1. | Tamil Nadu மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் கீழ் (TNEES) உற்பத்தி,சேவை & வியாபாரம் சார்ந்த நிறுவனங்களுக்கு (பெண்கள் மட்டுமே) |
25% மானியம் வழங்கப்படும் |
| 2. | கைவினைத் தொழில்கள் தொடங்க & விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தின் (KKT) கீழ் |
25% மானியம் வழங்கப்படும் |
| 3. | வேலையில்லாத இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் (UYEGP) கீழ் வியாபார நிறுவனங்களுக்கு |
25% மானியம் வழங்கப்படும் |
| 4. | பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் (PMEGP) கீழ் உற்பத்தி & சேவை நிறுவனத்திற்கு |
15% முதல் 35% வரை ஊதியம் வழங்கப்படும் |
| 5. | பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் ,குறு நிறுவனத்தினை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) கீழ் உணவு போன்ற உற்பத்தி நிறுவனங்களுக்கு |
35% மானியம் வழங்கப்படும் |
| 6. | புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் & தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) கீழ் உற்பத்தி & சேவை நிறுவனங்களுக்கு |
25% மானியம் வழங்கப்படும். |
| 7. | அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS) கீழ் (ஆதிதிராவிடர் &பழங்குடியினர்க்கு) உற்பத்தி சேவை & வியாபார நிறுவனத்திற்கு |
35% மானியம் வழங்கப்படும். |

0 Comments