ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின்
மருத்துவ காப்பிட்டு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டம்
பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு
மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டதின் மருத்துவ காப்பிடு தொகையை ரூ .5 லட்சத்தில் இருந்து ரூ .10 லட்சமாக உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .
இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்கிறது. இதில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நிலையில் ,ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தும் திட்டத்தை மத்திய சுகதார அமைச்சகம் இறுதி செய்துவருவதாக தகவல் வெளியாகிள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ,புற்றுநோய் சிகிச்சை போன்றவற்றுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவாகும் போது அதை காப்பிடு தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது . இது ஆண்டு முதல் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது .
ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கி ,100 கோடியாக உயர்த்தவும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கிசான் சம்மான் நிதி பெறுபவர்கள் ,கட்டிட தொழிலாளர்கள் ,நிலக்கரி சுரங்கம் அல்லாத மற்ற சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ,ஆஷா பணியாளர்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் அத்திட்டதில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .
பெட்ரோல் ,டீசல் விலை குறையலாம்
இந்தியன் ஆயில் ,பாரத் பெட்ரோலியம் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் முதல் மற்றும் 2-வது காலண்டில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் ஈட்டின் 2-வது காலாண்டு வரை அரசு எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டிய நிகர லாபம் ரூ .57,091,87. கோடி . இது 2022 -23-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட 4,917 சதவீதம் அதிகம் அதனால் மக்களவை தேர்தலையொட்டி ,பெட்ரோல் ,டீசல் விலை ரூ.5 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சம்பளதாரர்களுக்கான நிரந்தர கழிவில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை . அது இந்த ஆண்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது . புதிய வரிமுறைக்கு இணையாக ,பழைய வரிமுறையில் ,வருமான வரி விலக்கு ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

0 Comments