இந்திய விமானப்படையில் இசைகலைஞராக பணிபுரிய Agniveer Vayu திட்டத்தின் கீழ் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் ,இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திருமணமாகாத வேட்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் . இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் ,விண்ணப்பிக்கும் முன் www.agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரிக்கு சென்று உங்களின் தகுதியை அறிந்து கொள்ளவும் .
முக்கிய அம்சங்கள் :
| Name | Indian Airforce Recruitment 2024 |
| Post Name | Musician Post |
| Name Of Recruitment Scheme | Agniveer Vayu In -Take 01/2025 |
| Age | 25 Years To 27 Years |
| Educational | 10th Std |
| Selection Method | Written Exam / Musician Exam |
| Who Can Apply | Male / fEMALE |
| Apply Method | Online |
| Website Link | www.agnipathvayu.cdac.in |
| Starting Date | May 22 |
| Last Date | June 25 /2024 |
ஆட்சேர்ப்பு திட்டத்தின் பெயர் :-
AGNIVEER VAYU IN - TAKE 01/2025
வயது வரம்பு :
02.01.2004 -க்கும் 02.07.2007 -க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும் .
கல்விதகுதி :-
குறைந்தபட்சம் 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் Carnatic / Hundustani இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் . ஆட்சேர்ப்பின் போது இசைப் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும் . இசைப்படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் ,இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக்கருவிகளை வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் . ஆட்சேர்ப்பின் போது இசைப் பயற்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும் . இசைப் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் ,இசைக் கச்சேரிகளில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் .
தேர்ந்தெடுக்கும் முறை :
இந்திய விமானப் படையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு ,இசைத்திறன் தேர்வு ,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் . இதற்காக நேரடி ஆட்சேர்ப்பு நடத்தப்படும் .
| ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதி |
| 03.07.2024 முதல் 12.07.2024 வரை |
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் நான்கு வருடங்கள் இந்திய விமானப் படையில் இசைக் கலைஞர்களாக பணி புரிய அனுமதிக்கப்படுவர் . பணிக்கலாத்தில் வழங்கப்படும் சம்பளம் பின்வருமாறு:
| வேட்பாளர் சம்பள விவரம் |
| 1) முதல் வருடம் ரூ.30,000 |
| 2) இரண்டாம் வருடம் ரூ.33,000 |
| 3) மூன்றாம் வருடம் ரூ.36,500 |
| 4) நான்காம் வருடம் ரூ.40,000 |
இசை தகுதித்திறன் தேர்வில் கீழ்வரும் இசைக்கருவிகளில் ஏதவாதொன்றை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் .
| வேலை வாய்ப்பின் பிரிவு |
| *Consert Flute / Piccolo : Key Board / Organ / Piono |
| *Oboe; Guiter (Acoustic / Lead /Bass) |
| *Clarinet in Eb/ Bb ; Violin Viola ,String Bass |
| *Saxaphone in Eb /Bb ;Per- cussion / Drums (Acoustic / Electronic) |
| *French Horn in F/Bb ;All In-dian Classical Instruments |
| *Trumpet in Eb/C/Bb |
| *Trombone in Bb/G |
| *Baritone |
| *Euphonium |
| *Bass /Tuba in Eb/Bb |
ஆண் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 162 செ. மீ உயரம் ,நல்ல தெளிவான பார்வைத்திறன் மற்றும் விமானப்படை வீரர்களுக்குரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும் . பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 152 செ.மீ உயரம் இருக்க வேண்டும் .
www.agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதிக்குள் முன் பதிவு செய்து விட்டு ,ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதியில் தேவையான அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளவும் . அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் செலுத்தவும் . கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும் . நேரடி ஆட்சேர்ப்பு கான்பூர் மற்றும் பெங்களூரிலுள்ள விமானப்படை தளங்களில் நடைபெறும் .
Apply Link : Click Here
.png)
0 Comments