28-ந் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மிரம்மாண்டமான "விருந்துகள்' அமைக்க நடிகர் விஜய் உத்தரவு கட்சி நிர்வாகிகள் தீவிரம் .
தமிழ்நாடு:
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் கட்சி வளர்ச்சி மற்றும் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்ட விஜய் கட்சி பணிகளோடு மக்கள் நலப்பணிகளிலும் தொண்டர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தொண்டர்களுக்கு உத்தரவு தெரிவித்துள்ளார் .
அடுத்தப்படியாக தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் ,மாணவ மாணவிகளுக்கு நோட்டு ,பென்சில் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வருகிறார் ,ஏழை மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் தளபதி பயிலகம் என்ற பெயரில் மாலை நேர பயற்சி வகுப்பும் கட்சி சார்பில் நடந்து வருகிறது .
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பணி மேலும் தீவிரம் அடந்துள்ளது ,கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அன்னதானம் விருந்து :
வருகிற மே -28 ம் தேதி உலக பட்டினி தினத்தையொட்டி ஏழை பொதுமக்களின் பசியை போக்குவதற்க்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மாபெரும் விருந்து ஏற்பாடுகள் நடத்த விஜய் உத்தரவுக்கு இணங்க பிரம்மாண்டா முறையில் நடைபெற உள்ளது .
தமிழகம் மட்டும் அல்லாமல் ,புதுச்சேரி, கேரளா, ஆந்திரா ,கர்நாடகா ,ஆகிய மாநிலங்களிலும் விருந்து நடைபெற உள்ளது. சுமார் 2000 -க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்பட இருக்கிறது.
புஸ்சி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு :
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும் மற்றும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற 28 - ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் . மாவட்ட அணி ,நகரம் ,ஒன்றியம் ,கிளை மற்றும் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதி முறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .என்று அதில் கூறினார் .
இதை தொடர்ந்து சம்பந்திக்கான ஏற்பாடுகளை தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். உலக பட்டினி தினத்தையொட்டி கடந்த ஆண்டும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
இது மட்டுமன்றி தஞ்சை ,சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் பொதுமக்களுக்கு கட்சி சார்பில் அன்னதானம் நடந்து வருகிறது.
விருந்து & உணவுகள் :
விருந்தில் உணவுடன் வடை ,பாயாசம் ,மைசூர் பாக்கு ,சாம்பார் ,வத்தக் குழம்பு ,ரசம் ,மோர் ,அப்பளம் ,ஊறுகாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன . இதை பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கியுள்ளார்.


0 Comments