Lassijoy
எழுத்துக்களின் பிறப்பு
அ,உ ,க. ப -ஆகிய எழுத்துக்களை ஒலித்துப் பாருங்கள் ,வாயைத் திறந்தால் அ என்னும் எழுத்து ஒலிக்கிறது . உ என்னும் எழுத்தை ஒலிக்கும்போது இதள்கள் குவிகின்றன . நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஓட்டும்போது க என்னும் எழுத்து பிறக்கிறது . ப என்னும் எழுத்து இதல்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது இடமும் பிறக்கும் ,முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.
பிறப்பு
எழுத்துக்களை பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை ஒலியனுக்கள் உயிர் தங்கியுள்ள உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது மார்பு ,கழுத்து தலை மூக்கு ஆகியவற்றை பொருத்தி உதடு ,நாக்கு ,பல்,மேய்வாய் இவ்வுறுப்புகளின் முயற்சியால் வெவ்வேறு ஒலிகளாகப் பிறக்கின்றன. எழுத்துகளின் பிறப்பை இடப்பிறப்பு ,முயற்சிப்பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கலாம் .
எழுத்துக்களின் இடப்பிறப்பு
உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் முதல் எழுத்துக்கள் எனப்படும். மெய்யெழுத்துகளை ஒலிக்கும் போது வேறுப்பட்ட மூன்று ஒலிகளை நாம் கேட்கலாம் . அவை வல்லின ஒலி ,மெல்லின ஒலி ,இடையின ஒலி ஆகியன ,அவ்வொலிகள் வேறுபடுவதற்குக் காரணம் ,அவை பிறக்கும் இடங்கள் வெவ்வேறாக இருப்பதே .
உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் ,இடையின எழுத்துக்கள் ஆறும் ,கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. ( அ ,ஆ ,இ ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ ,ஓ ,ஔ மற்றும் ய ,ர ,ல ,வ,ழ,ள)
மெல்லின மெய் எழுத்துகளாகிய ங ,ஞ ,ண,ந,ம,ன ஆகிய ஆறும் மார்பினை இடமாகப் கொண்டு பிறக்கின்றன.
வல்லின மெய் எழுத்துகளாகிய க,ச ,ட ,த,ப,ற ஆகிய ஆறும் மார்பினை இடமாகப் கொண்டு பிறக்கின்றன. ஆயுத எழுத்து தலையை இடமாகப் கொண்டு பிறக்கின்றன.
எழுத்துக்களின் முயற்சிப்பிறப்பு
அ,ஆ ,ஆகிய இவ்விரண்டும் வாயைத் திறந்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
இ ,ஈ,எ,ஏ,ஓ ஆகிய ஐந்து எழுத்துக்களும் வாயைத் திறப்பதோடு ,மேல்வாய்ப் பல்லை,நா விளிம்பு தொடுவதால் பிறக்ககின்றன.
உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகிய ஐந்து எழுத்துகளும் உதடுகளைக் குவித்து ஒலிப்பதனால் பிறக்கின்றன.
உயிர் எழுத்துக்களை உச்சரிப்பு முறையில் அடிப்படையில் இதள் குவியா உயிர் இன இரண்டாகப் பிரிக்கலாம்.
இதழ் குவிந்த உயிர் - உ,ஊ ,ஒ ,ஓ ,ஔ
இதழ் குவியா உயிர் - அ ,ஆ ,இ ,ஈ,எ,ஏ,ஐ
மெய் எழுத்துக்கள்:
க்,ங், - இவ்விரு மெய்யெழுத்துக்களும் நாவினது முற்பகுதி அண்ணத்தைத் தொடுவதனால் தோன்றுகின்றன.
ச்,ஞ் - இவ்விரு மெய்களும் இடை நா ( நடு நாக்கு ) நடு அண்ணத்தைக் தொடுவதனால் பிறக்கின்றன.
ட்,ண், - இவை நாவினது நுனி ,அன்னத்தினது நுனியைத் தொடுவதனால் பிறக்கின்றன .
த்,ந் - மேல் பல்லினது அடியை ,நாக்கின் நுனி பொருந்துவதனால் பிறக்கின்றன.
ப்,ம் - மேல் உதடும் ,கீழ் உதடும் பொருந்த இவ்வெழுத்துகள் பிறக்கும்.
ய் - இது நாக்கினது அடிப்பகுதி ,மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதனால் பிறக்கின்றது.
ஈ,ழ் - இவை மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதனால் பிறக்கின்றன.
ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை ,நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதனால் பிறக்கின்றது.
ள் - இது மேல்வாயை ,நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதனால் பிறக்கின்றன.
வ் - இது மேல்வாயைப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதனால் பிறக்கின்றன.
ற்,ன் - இவை மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதனால் பிறக்கின்றன.
சார்பெழுத்துக்கள் :
ஆய்த எழுத்து வாயை திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துக்கள் யாவும் தத்தம் முதலெத்துக்கள் தோன்றும் இடங்களிலேயே பிறப்பதற்க்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன
ஆயுதம் - இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும் . அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
| எழுத்துக்கள் | ஆ | ய் | த | ம் |
|---|---|---|---|---|
| வகை | ||||
| பிறக்கும் இடம் | இதழ் குவியா | மேல்வாய் ஆடிப்பகுதி | மார்வினை இடமாகக் | மேல் உதடும் கீழ் உதடும் |


0 Comments