இந்தியா தேசிய இராணுவம்

  இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு💪

 


தலைப்பு
இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு . இந்த அமைப்பின் தூண்களாகத் திகழந்தவர்கள் நம் தமிழர்கள் . விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்த வர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது .

ரண்டாம் உலக போர் நடந்துகொண்டிருந்த 1942 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் ,ஆங்கிலேயப் படைகள் மலேயாவில் ஜப்பானியரிடம் சரணடைந்தன. இப்படையில் இந்திய வீரர்களும் இருந்தனர் . சரணடைந்த இந்திய வீரர்களை கொண்டு ஜப்பானியர்கள் ,மோகன்சிங் என்பவரின் தலைமையில் இந்திய தேசிய இராணுவம் (I. N. A) என்ற படையை உருவாக்கினர். 

இந்திய தேசிய இராணுவத்திற்க்கு  மக்கள் ஆதரவு பெருகியது. அக்காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து மலேயா,பர்மா போன்ற நாடுகளுக்குப் பிழைப்பிற்க்கா சென்ற தமிழர் பலர் இந்திய தேசிய இராணுவத்தில் பல பிரிவுகள் ஏற்பபடுத்தப்பட்டன . அதில் ஒன்று தான் . ஜப்பானியர்கள் ஒற்றர்படையில் இருந்த வீரர்களை ,இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றறிய நீர்மூல்கிகப்பல் மூலம் கேரளாவிற்கும் குஜராத்திற்க்கும்  அனுப்பினர். சிலரைத் தரைவழியில் பர்மா காடுகள் வழியாக இந்தியாவிற்க்கு அனுப்பினர். இந்திய இராணுவம் அவர்களைக் கைது செய்து சென்னை சிறைக்கு அனுப்பியது :பலருக்கு மரண தண்டனை அளித்தது. 


பலசாலியாக திகழந்தவர்கள்:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்க,91 நாள்கள் நீர்மூல்கிகப்பலில் பயணம் செய்து ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தனர் .1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் நாள் பதவியேற்றார். அவர் உரையாற்றிய மாபெரும் கூட்டத்தில் டெல்லி நோக்கிச் செல்லுங்கள் '(டெல்லி சலோ ) எனப் போர்முழக்கம் செய்தார். இவரின் வேண்டுகோள் அனைவரது மனத்திலும் பசுமரத்தாணிப்போல் பதிந்தது . 

நேதாஜி தலைமையில் இருந்த இந்திய தேசிய இராணுவப்படை பிரித்தானிய அரசை எதிர்த்து . அப்போது தமிழக்கத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராவணுத்திற்க்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார். 

இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான் . இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்காள் தான் என்றார்.


பெண்கள் படை உருவாக்காம்:

இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி பெயரில் பெண்கள் படைத் உருவாக்கப்பட்டது. இதில் தலைவர் டாக்டர் லட்சுமி . இப்படையில் தமிழப் பெண்கள் பெருமளவில் பங்க்கேற்றார் . இவர்களில் தலைசிறந்த தலைவளாக ஜானகி இராஜாமணி முதலானோர்  விளங்கினார். 

நேதாஜி அமைத்த தற்காலிக அரசில் கேப்டன் லட்சுமி ,சிதம்பரம் லோகநாதன் முதலான தமிழர்கள் அமைச்சர்களாகஇருந்தார்கள் சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார். அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கேப்டன் தாசன் ஆவார். அவர் பின்பு சுதந்திர இந்தியாவில் செசல்ஸ் நாட்டுத் தூதவராகப் பணியாற்றினார் . 


இரண்டாம் உலகப் போரின் காலம் :

இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய இராணுவத்தோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு போரிடப் பர்மா வழியாக இந்திய வரத் திட்டமிட்டது. 

தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார் . மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது 'என்று சர்ச்சில் கூறினார் . அதற்கு நேதாஜி இந்த தமிழனம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.

Post a Comment

0 Comments