நத்தம் பட்டா பற்றி ஒரு கூற்று !!!

இன்றைய தலைப்பு  நத்தம் பட்டா                                 

 
தலைப்பு
ஏரி ,குளம்,வண்டிப்பாதைகளுக்கு பட்டா கிடைக்குமா ?
 

நத்தம் பட்டா :

நத்தம் பட்டா என்றால் தனி பட்டா என்று அர்த்தம் கிடையாது. நத்தம் என்றால் குடியிருப்பு பகுதி என்று பொருள் ஆகும். நீங்கள் நத்தம் பகுதியில் வாழையடி வாழையாய் குடியிருந்து வந்தால் ,நீங்கள் வாழும் பகுதியில் ஜமாபந்தியின் என்று மனு அளித்து வந்தால் ,நீங்கள் மனு அளித்த இடங்களில் பட்டா வாங்கி கொள்ளலாம் . இதுவே நத்தம் பட்டா என்று பொருள் ஆகும்.  

நிங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நிலம் ஏரி,ஆறு ,கிணறு,குளம் ,வண்டிப்பாதை ,கல்லாங்குத்து கரடு ,தரிசு ,மேய்ச்சல்,கோவில் ,மற்றும் விளையாட்டுத் திடல் போன்ற இந்த இடங்களில் வசிக்கும் பகுதியில் நத்தம் பட்டா வழங்கப்பட மாட்டாது. இன்றைய கால கட்டங்களில்  பிளாட் போட்டு விற்கும் நிறுவனம் கோவில் ,பூங்கா ,விளையாட்டுத் திடல் என நிலங்களை ஒதுக்கி பிளாட் போடுகிறார்கள் . வருவாய்துறையில் இருந்து இந்த பகுதிக்கு இந்த நிலத்திற்க்கு மட்டும் என ஒதுக்கி விடுவார்கள். அந்த பகுதியில் நீங்கள் வீடு கட்ட விரும்பினால் கண்டிப்பாக பட்டா கொடுக்க இயலாது. 

நீங்கள் யோசிக்கலாம் இன்றைய காலங்களில் சென்னை வள்ளுவர் கோட்டம் ,சென்னை உயர்நீதி மன்றம் ,இன்னும் நிறைய இடங்களில் ஏரிப்பகுதியாகத் தானே உள்ளது. அந்த பகுதியில் எப்படி வீடு காட்டினார்கள் அந்த பகுதியில் பட்டா எப்படி தந்தார்கள் ?நீங்கள் பார்த்தால் பல இடங்களில் அரசு அலுவலங்கள் தடை செய்யப்பபட்ட பகுதி இருக்கிறது அல்லவா.. அதற்க்கு காரணம் யார் ?

 எடுத்துக்காட்டாக ஏரி மற்றும் வருவாய்த்துறை இருக்கும் பகுதியில் நீங்கள் வீடு கட்டி இருக்குறீர்கள் என்றால் ,அந்த வீட்டை கட்டி கொண்டு இருக்கும் போதே உங்களை அரசாங்கம் காலி பண்ண சொல்ல வேண்டும் அது தவறி விட்டால் உங்களை பார்த்து அடுத்தடுத்து பல பேர் அந்த பகுதியில் குடியேறுகிறார்கள். காலம் போக போக அந்த பகுதியில் பெரிய பெரிய வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வந்து விடுகிறது. மக்கள் அந்த பகுதியில் ஆயிரம் மற்றும் லட்சம் பேர் குடியேறி விடுகின்றனர்.

அந்த பகுதியில் ஏரியும் இப்போது காணமால் போய் விட்டன . இதற்கு அரசு என்ன செய்யும்,உங்கள் அத்தனை பேரையும் அரசு காலி பண்ண வேண்டும் . ஆனால் அரசு அதை செய்யாது . அரசு இதை ஏன் செய்யாது என்றால். ஏனென்றால் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ,வீடை இடிப்பது என்பது மக்களின் வாழ்வாதரத்தை பிடுங்குவது . அதனால் அப்படி செய்ய இயலாது . ஆனால் நீதிமன்ரங்கள் உத்தரவிட்டால் அரசாலும் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் அரசு என்ன செய்ய முடியும் என்றால் அந்த ஏரிப் பகுதியைப் வருவாய்த்துறை பதிவேட்டில் நத்தம் பகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கும் . அப்படி பிறப்பித்துவிட்டால் உங்களுக்கு பட்டா கொடுத்து விடுவார்கள் . நீங்கள் அந்த பகுதியில் வசிக்க தகுதியானவர்கள் ஆகிவிடுவிர்கள் .. மற்றும் குறிப்பிட்ட புறம்போக்கு நிலம் இடங்களை காப்பாற்றுவது அரசின் கடமையாகும்..


 

நிலம் வகைகள்
ஆற்றுவைப்பு ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடி ஆகும் நிலம் .
அருக்கக்கொலை ஆற்றோரத்தில் உள்ள நிலம்
படுகை ஆற்றோரத்து நிலம்
கரைவழி ஆற்றோமான நிலம்
காற்புரவு ஆற்றுப் பாய்ச்சல் நிலம்
வெளிவாய்ப்படுகை ஆறு,குளங்களை அடுத்துப் புறம்பாக உள்ள நிலம்
இறைப்புப் பட்டரை கிணற்றுப் பாய்ச்சல் உள்ள நிலம்
ஏற்றப்பட்டரை ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூள்ந்த நிலம்
தூர்வை கிணற்றுச் சேர்ந்த நிலம்
நன்செய்நிலம் நீர்வளம் நிறைந்துள்ள நிலம்
ஆயக்கட்டு ஒரு நீர்நிலையை ஆதராமாக கொண்ட நிலம்
வானம் பார்த்த நிலம் மழை நீரால் சாகுபடியாகும் நிலம்
அளக்கர் திணை கடலாற் சூழப்பட்ட நிலம்
சாட்டி அறுவடை ஆன பின் உழாது கிடக்கும் நிலம்
நகரி அரசுக்குரிய புறம்போக்கு


மற்ற அனைத்து தகவல்களையும் உடனே தெரிந்து கொள்ள click here கிளிக் செய்யவும்.

Comments

Popular posts from this blog

10th Results SSLC Exam Date 2025 : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2025 Tamil Nadu .

Indian Army -TAO Territorial Army Officer Job Notification Released | Last Date June 10,2025

anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025