★திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே எம்.குரும்பப்பட்டியில் கிடா முட்டும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
★இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கலந்து கொண்டன. முன்னதாக, இவற்றுக்கு கால்நடை மருத்துவா்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனா்.
★போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டுக் கிடாய்களுக்கு இரும்புப் பீரோ, பித்தளை அண்டா, வீட்டு உபயோகப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. கிடாய் வளா்ப்பாளா்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 30-ஜோடிகள் களமிறக்கப்பட்டன.
★75 முறை ஒரு கிடா முட்டினால் அந்தக் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Website Click -lassijoy.blogspot.com

0 Comments